ஏழு ஆவிக்குரிய அனுபவங்கள்

Seven Spiritual Experiences

7. ஆவிக்குரிய அனுபவங்கள்

மனிதன் பிறக்கும் பொழுது பாவத்தோடு பிறக்கின்றான். அதற்கு ஜென்ம பாவம் என்பது பெயராகும் (ரோமர் 7:20). பின்பு அவன் கொலை செய்தல், களவு செய்தல், பொய் சொல்லுதல், பிறரை இச்சையோடு பார்த்தல், வேசித்தனம, விபச்சாரம் பண்ணுதல் என்று பாவச் செயல்களில் ஈடுபடுகிறான் (ரோமர் 3:23). பாவி இறுதியில் அக்கினிக்கடலில் பங்கடைவிருக்கின்றான் (வெளி. 21:8). அந்த அக்கினிக்கடல் தண்டனைக்குத் தப்ப வேண்டுமானால் ஒரே ஒரு வழி மாத்திரமே உள்ளது. பாவியாக இருக்கும் மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாற வேண்டும். இயேசுகிறிஸ்துவைப் போல மாறுவதற்கு 7 விதமான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவிக்குரிய அனுபவங்களில் முக்கியமானதும் முதன்மையானதும் ஆவிக்குரிய அனுபவம் மனந்திரும்புதலாகும்.

மனந்திரும்புதலில் ஆரம்பம்
கிறிஸ்துவைப் போல நிறைவு